எந்தவொரு நேரத்திலும் நாடு முடங்கலாம் - அரசு தீவிர ஆலோசனை?

பண்டிகைக் காலங்களில் நாட்டை முடக்குவது குறித்து அரசாங்கம் தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் அரசாங்கம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக அறியமுடிகிறது.

எவ்வாறாயினும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காலப்பகுதியில் நாட்டை முடக்காமல் பயணத்தடைகளை மாத்திரம் அமுல்படுத்தும் யோசனையை சுகாதார பிரிவு முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் பொது இடங்களில் ஒன்றுகூடுவதை தவிர்க்கும் விதமாக இவ்வாறு பயணத்தடையை அல்லது முடக்கத்தை அமுல்படுத்துவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் ஒமிக்ரோன் திரிபுடன் கொரோனா நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில், இந்த வைரஸ் பரவலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் இந்த பொது முடக்கம் இருக்குமென கருதப்படுகிறது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.