பிரியந்த குமாரவின் பூதவுடல் நாட்டை வந்தடைந்தது!

பாகிஸ்தானில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் பூதவுடலை சுமந்து வந்த ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சற்று முன்னர் தரையிறங்கியுள்ளது.

கடந்த வாரம் சியால்கோட்டில் கும்பலால் அடித்துக்கொலை செய்யப்பட்ட இலங்கை தொழிற்சாலை மேலாளர் பிரியந்த குமாரவின் எச்சங்கள் லாகூரில் உள்ள அல்லாமா இக்பால் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து திங்கட்கிழமை இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் அடங்கிய கும்பல், தொழிற்சாலையின் மேலாளராக இருந்த பிரியந்த குமார, தெய்வ நிந்தனை குற்றச்சாட்டில் வெள்ளிக்கிழமை சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டதுடன், பின்னர் அவரது உடலை தாக்குதல் கும்பல் எறியூட்டினர்.

இந் நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்கேத்தில் 900 நபர்கள் மீது பாகிஸ்தான் தண்டனைச் சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரியந்த குமாராவின் பிரேத பரிசோதனை சியால்கோட்டின் அராமா இகுபால் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டது, பின்னர் அவரது உடல் 1122 ஆம்பியூலன்ஸ் மூலம் பலத்த பாதுகாப்புடன் லாகூர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந் நிலையில் இன்றைய தினம் உடல் ஆம்பியூலன்ஸ் மூலமாக லாகூர் விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

அங்கு பஞ்சாப் சிறுபான்மை விவகார அமைச்சர் இஜாஸ் ஆலம் அகஸ்டின் ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் விமானம் மூலத்தில் அரசு மரியாதையுடன் பிரியந்த குமாரவின் உடலை அனுப்பி வைத்தார்.

சமய நல்லிணக்கம் தொடர்பான பாகிஸ்தான் பிரதமரின் விசேட பிரதிநிதி ஹாபிஸ் மொஹமட் தாஹிர் அஷ்ரபி, இலங்கையின் தூதுவர் யாசின் ஜோயா மற்றும் பஞ்சாப் உள்துறை மற்றும் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதிநிதிகள் உட்பட ஏனைய அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
49 வயதான பிரியந்த குமாரவின் கொலை குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய மொத்தம் 131 நபர்களை இதுவரை கைதுசெய்துள்ளதாக பஞ்சாப் காவல்துறையினர் திங்களன்று தெரிவித்துள்ளனர்.

இந்த 131 பேரில் 26 நபர்கள் கொலையுடன் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளாக கருதப்படுகின்றனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.