முன்னாள் மேல்மாகாண ஆளுநர் அசாத் சாலி விடுதலை

முன்னாள் மேல்மாகாண ஆளுநர் அசாத் சாலி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று 02 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றம் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அசாத் சாலிக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மனுதாரர் தரப்பு சாட்சி விசாரணைகள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நவம்பர் 19ஆம் திகதி நிறைவு செய்யப்பட்டன.

பிரதிவாதி தரப்பு சாட்சி விசாரணையின்றி, பிரதிவாதியை விடுதலை செய்யுமாறு அசாத் சாலி சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன கோரிக்கை விடுத்திருந்தார்.

அதற்கமையவே இன்று (02) அவர் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் முழுமையாக விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தாம் உள்ளிட்ட முஸ்லிம் மக்கள் அனைவரும் குர்ஆனில் கூறப்பட்டுள்ள சட்டங்களை மாத்திரமே ஏற்றுக்கொள்வதாகவும் நாட்டில் அமுல்படுத்தப்படும் சட்டங்கள் குறித்து பொருட்படுத்துவதில்லயெனவும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது கடந்த மார்ச் மாதம் 09 ஆம் திகதி அசாத் சாலி பகிரங்கமாக தெரிவித்ததற்கமைய, பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் சிவில், அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாய சட்டம் ஆகியவற்றின் கீழ் குற்றமிழைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.