24 மணி நேரத்தில் 21 எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள்.

இன்று (20) காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 21 சமையல் எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

21 சம்பவங்களில் சுமார் 15 சம்பவங்கள் மேல் மாகாணத்திற்கு வெளியே இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நவம்பர் முதலாம் திகதி முதல் 49 நாட்களில் 836 வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், சுமார் 95 வீதமான சம்பவங்கள் எரிவாயு அடுப்புகளை சேதமடைந்துள்ளமை தொடர்பில் பதிவாகியுள்ளன.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.