நாட்டில் பல பகுதிகளில் திடீரென மின் தடை - மின்சார சபை வெளியிட்டுள்ள காரணம்.

நாட்டில் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷ்ன ஜயவர்தன, தெரிவித்தார்.

கொத்மலையிலிருந்து பியகம வரையான மின்சார விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே, பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதனால், பெரும்பாலான பகுதிகளுக்கான மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

மின்சார விநியோகத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.