தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - மீண்டும் பகுதி பகுதியாக அல்லது பிரதேச ரீதியாக முடக்க ஆலோசனை!

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், எதிர்காலத்தில், சில பிரதேசங்கள் அல்லது பகுதிகளை முடக்க வேண்டும் என்றும் சுகாதார அமைச்சின் கொவிட்19 வைரஸ் பரவல் செயற்பாடுகளின் பிரதான தொடர்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்களின் எண்ணிக்கை 5 - 7 வீதத்தில் உயர்ந்துள்ளதென்றும் இது தொற்றாளர்களின் எண்ணிக்கையில் விரைவான அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரஇறுதி மற்றும் விடுமுறை நாட்களில் மக்கள் நடந்துகொண்ட விதமே பாதகமான விளைவுகளுக்குக் காரணம் .

இதன் சரியான முடிவுகளை இன்னும் இரண்டு வாரங்களில் பார்க்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பேணுவதற்காகவே நாடு திறக்கப்பட்டுள்ளது, உல்லாசப் பயணங்கள் செல்வதற்காக அல்ல என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

சுகாதாரச் சட்டங்களை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் ,அவ்வாறு இல்லையெனில், கொரோனா பரவல் அதிகரித்து, கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் வீழ்ச்சியடையக் கூடும்.

எதிர்காலத்தில் வைரஸ் பரவுவதைப் பொறுத்து, சில பிரதேசங்கள் அல்லது பகுதிகள் மட்டுமே முடக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.