கொழும்பு − கண்டி பிரதான மீண்டும் மூடப்படுமா? கேகாலை மாவட்ட செயலாளர் வெளியிட்ட தகவல்.

கொழும்பு − கண்டி பிரதான வீதியின் பஹல கடுகண்ணாவ பகுதியில் மண்சரிவு அபாயம் நிலவும் பிரதேசத்தை அண்மித்து, சுமார் 75 மில்லிமீற்றருக்கு அதிக மழை வீழ்ச்சி பதிவாகும் பட்சத்தில், அந்த பகுதியூடான போக்குவரத்தை மீண்டும் தடை செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும் என கேகாலை மாவட்ட செயலாளர் மஹிந்த வீரசூரிய  தெரிவித்துள்ளார்.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் தீர்மானிக்கும் பட்சத்திலேயே, இந்த வீதியூடான போக்குவரத்து தடை செய்யப்படும் என அவர் கூறியுள்ளார்.

பஹல கடுகண்ணாவ பகுதியில் ஒரு வழி போக்குவரத்து நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், இந்த வீதியை மீள மூடுவதற்கு இதுவரை தீர்மானம் எடுக்கவில்லை என கேகாலை மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.