மின்சாரம் இன்றி நாடு இருளடையுமா? ஓரணியில் திரளும் தொழிற்சங்கங்கள் வெளியிட்ட அறிவிப்பு.

தேசிய வளங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கு எதிராக, பல தொழிற்சங்கங்களை ஒன்றிணைத்து, எதிர்வரும் தினங்களில் பணி புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக எரிபொருள், துறைமுகம் மற்றும் மின்சார ஒன்றிணைந்த தொழிற்சங்க ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மின்சாரம், துறைமுகம், எரிபொருள், தேசிய நீர் வழங்கல் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்கங்களின் பங்குப்பற்றுதலுடன் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று இலங்கை மின்சார சபை ஒன்றிணைந்த தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ரஞ்ஜன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

இதன்படி மின்சார ஊழியர்கள் ஈடுபடும் பணி புறக்கணிப்பில் ஈடுபடும் பட்சத்தில், நாட்டின் மின்சார விநியோகம் தடைபடக்கூடும். ஏற்கனவே இது தொடர்பில் தகவல்கள் வெளியானமை நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.