உயர் தொழில்நுட்ப கேபிள்களின் மூலம் அமைக்கப்பட்டுள்ள முதலாவது பாலம் சற்று முன்னர் திறந்து வைப்பு

நாட்டில் முதற்தடவையாக உயர் தொழில்நுட்ப கேபிள்களின் மூலம் அமைக்கப்பட்டுள்ள புதிய களனி பாலம் சற்று முன்னர் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கல்யாணி பொன் நுழைவு என பெயர் சூட்டப்பட்ட குறித்த புதிய களனி பாலம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

380 மீற்றர் நீளமான இந்த பாலத்தின் உருக்கினால் ஆன முதலாவது தொகுதிக்கு 31 ஆயிரத்து 539 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதுடன், இரண்டாவது தொகுதியான கான்கிரீட் தொங்கு பாலம் பகுதிக்கு 9 ஆயிரத்து 896 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக பெருந்தெருக்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் நிதி பங்களிப்புடன் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.