நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரிப்பு.

கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வரும் நிலையில், நேற்று திடீரென எண்ணிக்கை அதிகரித்து 600 இற்கும் மேற்பட்ட கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

நேற்று 628 கொரோனா நோயாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 544,013 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள பல மருத்துவமனைகளில் தற்போது 15,619 பேர் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 339 பேர் மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 514,573ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நேற்றைய தினம் மேலும் 15 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதோடு, உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,821ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.