பயணப் பையிலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண் யார்? – பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்ட தகவல்!

சப்புகஸ்கந்தை பகுதியில் பயணப் பையொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பைச் சேர்ந்த 42 வயதான பெண்ணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் என காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உயிரிழந்த பெண்ணின் கணவரால் குறித்த சடலம் அடையாளம் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அருகில் உள்ள குப்பைகளைக் கொட்டும் இடமொன்றில் கைவிடப்பட்டிருந்த பயணப்பையிலிருந்து நேற்றைய தினம் குறித்த சடலம் மீட்கப்பட்டடது.


Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.