முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்திருத்தம் தொடர்பில் நீதி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிக்கை.

முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முறைமையின் படி ஆர்வமுள்ள சகல தரப்பினருடனும் கலந்துரையாடி தேவையான திருத்தங்கள் மற்றும் மாற்றங்களைச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதனை ஆர்வமுள்ள சகல தரப்பினருடன் கலந்துரையாடி பின்னரே இறுதித் தீர்மானம் உரிய நேரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றுவதற்கு எதிர்பார்ப்பதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

முழுமையாக முகத்தை மூடுவதை தடுப்பது தொடர்பான சட்டம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் தேசிய பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அது நீதி அமைச்சின் விடயதானத்திற்கு அப்பாற்பட்டது எனவும் நீதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

முஸ்லிம் விவாக விவகரத்து சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படுவது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டு நீதி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

முஸ்லிம் விவாக விவகரத்து சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்று முஸ்லிம் சமூகத்தினரிடம் இருந்தும் ஏனைய சமூகங்களில் இருந்தும் நீண்ட காலமாக பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இது தொடர்பாக பல்வேறு நிபுணர் குழுக்கள் அவ்வப்போது நியமிக்கப்பட்டு வந்தன. நீதி அமைச்சராக அலி சப்ரி பதவியேற்று இரண்டு மாதங்களுக்குள் இது தொடர்பில் அமைச்சரவைக்கு அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது.

அதற்கமைய ஆலோசனைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டது. இது தொடர்பான அமைச்சரவை உப குழுவொன்றும் நியமிக்கப்பட்டது. அமைச்சரவை உப குழுவின் பரிந்துரைக்கு அமைவாக சட்ட வரைஞர் திணைக்களத்திற்கு பின்வரும் விடயங்கள் முன்வைக்கப்பட்டன.

திருமண வயது 18 ஆக இருக்க வேண்டும், மணமகளின் சம்மதம் பெறப்பட வேண்டும் மற்றும் கையொப்பம் பெற வேண்டும், முஸ்லிம் பெண்ணுக்கு நிரந்தர விவாகரத்து கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும், காதி நீதிமன்றங்கள் ஒழிக்கப்பட வேண்டும் மற்றும் பலதார திருமணம் ஒழிக்கப்பட வேண்டும் ஆகிய பரிந்துரைகள் அதில் அடங்கும்.

அதைத் தொடர்ந்து, சட்டம் இயற்றுகையில் எவ்வாறு அவை அமைய வேண்டும் என்பது தொடர்பில் நீதி அமைச்சருக்கு ஆலோசனை வழங்க வக்புசபையின் தற்போதைய தலைவரான மூத்த சட்டத்தரணி ஷப்ரி ஹலிம்தீன் தலைமையிலான குழு நியமிக்கப்பட்டது.

சட்ட வரைஞரினால் அமைச்சரவையின் தேவைக்கேற்ப கடந்த ஜூன் மாதம் நகல் சட்டமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதோடு அது குறித்து தற்போது ஆராயப்படுகிறது.

இது தவிர இலங்கையில் தற்போதுள்ள சட்ட விதிகளின்படி, முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இருவருக்கு இடையிலான திருமணம், முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டத்தின் கீழ் மட்டுமே பதிவு செய்யப்பட முடியும், விரும்பினால், பொதுச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ளலாம்.

இதன்படி, முஸ்லிம் சட்டத்துடன் தொடர்புள்ள திருத்தங்கள் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முறைமையின்படி ஆர்வமுள்ள சகல தரப்பினருடனும் கலந்துரையாடி தேவையான திருத்தங்கள் மற்றும் மாற்றங்களைச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதனை உரிய நேரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நீதி அமைச்சு எதிர்பார்க்கிறது.

முழுமையாக முகத்தை மூடுவதை தடுப்பது தொடர்பான சட்டம் தேசிய பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டு இருப்பதால் அது நீதி அமைச்சின் விடயதானத்திற்கு அப்பாற்பட்டதாகும். இதன்படி, பொது இடங்களில் முகத்தை முழுமையாக மறைப்பதை தடுக்கும் சட்டத்தை இயற்றுவதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கலாநிதி சரத் வீரசேகர அமைச்சரவைக்கு யோசனை முன்வைத்துள்ளதோடு அதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அமைச்சரவை முடிவைத் தொடர்ந்து, சட்ட வரைஞர் திணைக்களம் இது தொடர்பான சட்ட வரைபை தயாரித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பியுள்ளது. அரசாங்க சட்ட தயாரிப்பு முறையின்படி, அது முறையாக வர்த்தமானியாக வெளியிடப்பட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.