வரவு – செலவுத் திட்டத்தில் பொது மக்களுக்கு எவ்வித சலுகையும் வழங்கப்படவில்லையென பாரிய ஆர்ப்பாட்டம்.

2022ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் பொது மக்களுக்கு எவ்வித சலுகையும் வழங்கப்படவில்லையென வலியுறுத்தி ஐக்கிய தேசியக் கட்சி இன்று மாலை கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளது.

கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜேவர்தன, பொதுச் செயலாளர் ரஞ்சித் பண்டார, தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க, முன்னாள் அமைச்சர் சாகல ரட்ணாயக்க, முன்னாள் எம்.பி சமன் ரத்னப்பிரிய மற்றும் ஐ.தே.கவின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் உட்பட கட்சியின் முக்கிய உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

அத்தியாவசியப் பொருட்கள் முதல் நாட்டு மக்களின் சாதாரண வாழ்க்கையில் தாக்கம் செலுத்தும் அனைத்து காரணிகளும் அதிகிரித்துள்ளமைக்கு கண்டனம் வெளியிடப்பட்டதுடன், மக்களின் வாழ்க்கைச் சுமைi குறைக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கையெடுக்க வேண்டுமென இதன்போது வலியுறுத்தப்பட்டது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.