புதிய கொவிட் வைரஸ் திரிபுக்கு பெயர் சூட்டியது உலக சுகாதார ஸ்தாபனம்.

புதிதாக கண்டறியப்பட்ட மிகப் பாதிப்பை ஏற்படுத்தும் புதிய கொரோனா வைரஸ் பிறழ்வுக்கு (B.1.1.529), 'Omicron' என உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) பெயரிட்டுள்ளது.

கொவிட் வைரஸ் தொற்றுக்கு கிரேக்க அரிச்சுவடி எழுத்துகளில் பெயரிடும் (அல்பா, பீட்டா, டெல்டா) முறைமைக்கு அமைய அதன் 15ஆவது எழுத்தான 'Ο' ஒமிக்ரோன் ('Omicron') என பெயரிடப்பட்டுள்ளது.

குறித்த கொரோனா வைரஸ் திரிபானது, முதன் முதலில் நவம்பர் 24ஆம் திகதி தென்னாபிரிக்காவில் அடையாளம் காணப்பட்டிருந்தது.

இத்திரிபானது அதிகளவான மாறுபட்ட மரபணுவைக் கொண்டுள்ளதாக (mutation) அடையாளம் காணப்பட்டுள்ளதாக, உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளதுடன், இதில் பல மரபணுக்களுடனான வைரஸ்கள் மிக பாதிப்பை ஏற்படுத்துபவையாக கண்டறியப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.