கொழும்பு – கண்டி பிரதான வீதியின் முக்கிய பகுதி மறுஅறிவித்தல் வரை மூடப்படுகிறது.

சீரற்ற வானிலை காரணமாக, கொழும்பு – கண்டி பிரதான வீதியின் பஹல கடுகண்ணவ பகுதியை மூடுவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் மறு அறிவித்தல் வரை குறித்த பகுதியை மூடுவற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது

குறித்த பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயம் காரணமாகவே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, கேகாலை மாவட்ட செயலாளர் மஹிந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக குறித்த வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.