பேஸ்புக்கில் மற்றுமொரு மாற்றம்

பேஸ்புக் சமூகவலைத்தள பயனர்களின் பிரத்தியேக பாதுகாப்புக்காகப் புதிய தீர்மானமொன்று எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதற்கமைய, பேஸ்புக்கில் உள்ள facial recognition வசதியைத் தடை செய்வதற்கு மெட்டா நிறுவனம் (META) தீர்மானித்துள்ளது.

அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளது.

பயனர்களின் பிரத்தியேக பாதுகாப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குத் தீர்வு காணும் விதமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Facial recognition தொழில்நுட்பம் காரணமாக மெட்டா நிறுவனத்திற்கு எதிராக அண்மைய காலமாக பல சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.