உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பக் காலம் நீடிப்பு

2021 க.பொ.த. உயர் தர பரீட்சைகளுக்கான விண்ணப்ப முடிவுத் திகதி எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித அறிவித்துள்ளார்.

2021 பல்கலைக்கழக அனுமதி தொடர்பான வெட்டுப்புள்ளிகள் அண்மையில் வெளியிடப்பட்டிருந்த நிலையில், பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத மாணவர்கள் பலர் மீண்டும் உயர் தர பரீட்சைகளை எழுத கோரிய வாய்ப்பை கருத்திற் கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சனத் பூஜித வெளியிட்டுள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, ஏற்கனவே அமுல்படுத்தப்பட்டுள்ள வகையில் 2021 க.பொ.த. உயர் தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஒன்லைன் முறை மூலம் மாத்திரம் அங்கீகரிக்கப்படுமென, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

பரீட்சைகள் திணைக்கள இணையத்தளம்: www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic இன் ஊடாக அல்லது பரீட்சைகள் திணைக்களத்தின் கையடக்கத் தொலைபேசி செயலியான 'DoE' ஊடாக விண்ணப்பிக்க முடியுமென, சனத் பூஜித அறிவித்துள்ளார்.

அரசாங்க பாடசாலைகளில் கற்கும் மாணவர்கள் உரிய பாடசாலையின் அதிபர்கள் ஊடாக அதிபர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் (User Name) கடவுச்சொல் (Password) மூலம் இவ்விண்ணப்பங்களை மேற்கொள்ள முடியுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தனிப்பட்ட பரீட்சார்த்திகள் உரிய ஆலோசனைகளைப் பின்பற்றி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, அதன் அச்சுப் பிரதியை பெறுவதோடு, உரிய சந்தர்ப்பத்தில் காண்பிக்கும் வகையில் தம்வசம் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், 2020 க.பொ.த. சாதாரண பரீட்சையின் அழகியல் பாடங்கள் தொடர்பான பிரயோக பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் 01 - டிசம்பர் 11 வரை நடாத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.