அரபு மொழி பெயர் பலகைகளை அகற்றுவது தொடர்பில் அரசாங்கம் கவனம்

கிழக்கு மாகாண பிரதேசங்களில் அரபு மொழியில் எழுதப்பட்டிருச்த வீதி பெயா் பலகைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் உள்ள சில வீதிகளில் உள்ள அரபு பெயர் பலகைகளை அகற்றுவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

தேசிய மொழிகள் தவிர்ந்த ஏனைய மொழிகளிலுள்ள வீதிகளின் பெயர்களை நீக்குவது தொடர்பான செயற்பாடுகள் இலங்கையின் பொதுச் சேவை ஆணைக்குழு மற்றும் நில அளவைத் திணைக்களத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய சட்டமூலத்தின் மூலம் அந்தப் பெயர்கள் நீக்கப்படும் என நில அளவைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் கூற்றுப்படி, பொது மக்களுக்கு பெயர் பலகை காட்டப்பட்டால், சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும், மேலும் ஆங்கிலத்திற்கு இணை மொழியாக மூன்றாம் இடம் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.(TN)

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.