நாளை முதல் ஆரம்பம்....

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசியின் 3ஆவது டோஸாக (Booster) Pfizer தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கை நாளை (17) முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக, ஒளடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் மருந்துகள் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

இதன் முதற் கட்டமாக மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அநுராதபுரம் மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் இந்நடவடிக்கை நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது.

அதற்கமைய, 3ஆவது டோஸ் வழங்கப்படும் நபர்கள், எத்தகையதொரு கொவிட்-19 தடுப்பூசியினதும் 2ஆவது டோஸை பெற்று 3 மாதங்கள் நிறைவடைந்திருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுகாதார சேவையில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் உள்ளிட்ட, கொவிட் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கான Booster தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வரை 120,485 பேருக்கு பூஸ்டர் டோஸாக Pfizer தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கையில் 1.5 மில்லியனுக்கும் அதிகமானோருக்கும் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும், 36 மில்லியன் பேருக்கு இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் தொற்றுநோயியல் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.