தொடரும் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் - அச்சத்தில் மக்கள்!

நாட்டின் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் தரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் தற்போது சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக இடம்பெற்ற எரிவாயு கசிவினால் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவங்களினாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

புத்தளம் ஆராச்சிக்கட்டுவ வைரன்கட்டுவ பிரதேசத்திலுள்ள ஓலை வீடொன்றில் வைக்கப்பட்டிருந்த சிறிய சமையல் எரிவாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்துள்ளமை தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும், கசிவு ஏற்பட்ட குறித்த சமையல் எரிவாயுவினால் எவ்விதமான சேதங்களும் ஏற்படவில்லை எனவும் ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் குறிப்பிட்டனர்.

நேற்று 5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரை கொள்வனவு செய்து வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், குறித்த சிலிண்டரிலிருந்து கசிவுடன் தீப்பிடித்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இதனையடுத்து, உடன் செயற்பட்ட வீட்டார் அந்த சமையல் எரிவாயுவை உடனடியாக இழுத்தெடுத்துச் சென்று கழிவுநீருக்குள் வீசியுள்ளனர்.

இவ்வாறு செயற்பட்டமையினால் உயிர்ச் சேதங்களோ அல்லது சொத்துக்களுக்கு சேதங்களோ ஏற்படவில்லை என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

கேகாலை − ரொக்ஹில் − கஹடபிட்டிய பகுதியில் சமையல் எரிவாயு அடுப்பொன்று வெடித்து சிதறியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று (28) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

வீட்டின் உரிமையாளர் அதிகாலையில் தேநீரை ஊற்றுவதற்காக நீரை அடுப்பில் வைத்த வேளையிலேயே இந்த சமையல் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியுள்ளது.

சம்பவத்தில் எவருக்கும், எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிய வருகின்றது.

எரிவாயு கசிவு இந்த வெடிப்புக்கான காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர்.

எரிவாயு சிலிண்டருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

யாழ்ப்பாணம், சுன்னாகம், கந்தரோடைப் பிரதேசத்திலும் நேற்று (28) பிற்பகல் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்று வெடிப்புக்குள்ளாகியுள்ளது.

கந்தரோடை, கா்ப்பப்புனை பிள்ளையாா் கோவில் வீதியிலுள்ள வீடொன்றிலேயே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சமையலறையில் சேதம் ஏற்பட்டுள்ளபோதிலும் அங்கு யாரும் இருக்காததால் உயிர் சேதம் எதுவும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிண்ணியா - ஆலங்கேணி பாடசாலை வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று (28) பகல் சமைக்கும் போது எரிவாயு அடுப்பு தீப்பற்றி விபத்து ஏற்படடுள்ளது.

இதனால் வீட்டிலிருந்தோர் வெளியில் ஓடி பிறரின் உதவியுடன் தீயை அனைத்துள்ளனர்.

இவ்வெடிப்பினால் ஏற்பட்ட தீயால் ஜன்னல் எரிந்துள்ளது.

எனினும் எவருக்கும் எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.