வீட்டின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி; ஒருவர் காயம்!

கேகாலை, ரம்புக்கனை தொம்பேமட பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மண்மேடொன்று சரிந்து வீடொன்றின் மீது விழுந்ததில் அவ்வீட்டிலிருந்த தாயும், 8 மற்றும் 14 வயதுடைய இரு மகள்களும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த சிறுமிகளின் தந்தை பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மண்சரிவில் சிக்கிய வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.