கொழும்பு – கண்டி வீதியை மண்சரிவு அபாயத்திலிருந்து பாதுகாக்க புதிய நடைமுறைகள் அறிமுகம்.

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் பஹல கடுகண்ணாவ பகுதியில் மண்சரிவு அபாயத்தை தவிர்த்துக்கொள்வதற்கு நீண்ட கால நடைமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிக்கின்றது.

இந்த பரிந்துரைகள் வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் ஆசிரி கருணாவர்தன தெரிவிக்கின்றார்.

இதன்படி, கொழும்பு – கண்டி பிரதான வீதியின் பஹல கடுவண்ணாவ பகுதியை விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக பஹல கடுகண்ணாவ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு அபாயம் காரணமாக, குறித்த வீதி பல நாட்கள் மூடப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, குறித்த பகுதியில் மண்சரிவு அபாயத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் முன்னெடுத்திருந்தனர்.


எவ்வாறாயினும், தொடர்ந்து காணப்படும் அபாய நிலைமையை தவிர்த்துக்கொள்வதற்கு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை எதிர்வரும் தினங்களில் நடைமுறைப்படுத்தவுள்ளதாக நிறுவனத்தின் பணிப்பாளர் ஆசிரி கருணாவர்தன தெரிவிக்கின்றார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.