நாட்டில் மீண்டும் பயணக் கட்டுப்பாடு? சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்ட தகவல்

கொவிட்-19 தொடர்பான சுகாதார அமைச்சின் தரவுகளின் படி நாட்டில் நாளாந்தம் பதிவாகும் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் காட்டுகிறது. அதன்படி, 20 நாட்களுக்குப் பிறகு, 628 புதிய தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதால், நாட்டில் தினசரி கண்டறியப்பட்ட கொவிட் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 5 ஆம் திகதி 600 ஐத் தாண்டியது.

தொற்றுநோய்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தால், கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியிருக்கும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மக்கள் பொறுப்பற்ற விதத்தில் நடந்துக்கொள்ளும் பட்சத்தில், விரும்பியோ விரும்பாலோ பயணக் கட்டுப்பாட்டை அமுல்படுத்த வேண்டிய நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நோய் பரவும் விதத்தில் திருமண நிகழ்வுகள், களியாட்ட நிகழ்வுகள், வேறு நிகழ்வுகள் இடம்பெற்றதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.