வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் எட்டு வயது சிறுமி பலி

மாத்தறை, வெலிகம பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்றிரவு இடம்பெற்ற தீ விபத்தில் எட்டு வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

வெலிகம, வெவேகெதரவத்த பகுதியில் அமைந்துள்ள வீட்டிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

தீ விபத்தில் வீட்டின் கூரை பலத்த சேதமடைந்துள்ளதுடன், உயிரிழந்த சிறுமியின் பாட்டியும் சகோதரியும் வீட்டிலிருந்து தப்பித்து வெளியேறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த வெலிகம பொலிஸார், வீட்டில் உள்ள அறையொன்றில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வாகனங்களை வரவழைத்தனர்.

எரிவாயு கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்படவில்லை என்பதை உறுதிபடுத்திய பொலிஸார், தீ விபத்து தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.