ஹட்டன் பகுதியில் சமையல் எரிவாயு குழாய் வெடிப்பு - இன்றும் பல இடங்களில் எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் பதிவு

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் ஹட்டன் புருட்ஹில் பகுதியில் நடத்திச் செல்லப்படும் ஹோட்டலொன்றில் இன்று (29) காலை வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சமையல் எரிவாயு அடுப்பை பற்றவைத்து ஒரு மணத்தியாலத்தின் பின்னர், சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் அடுப்பை இணைக்கும் குழாய் வெடித்து சிதறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இதன் போது எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையென தெரிவித்த ஹட்டன் பொலிஸார் சமையல் அறையில் இருந்த சில பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் இன்றையதினம் (29) நாட்டில் சமையல் எரிவாயு வெடிப்பு மற்றும் தீப்பிடிப்பு தொடர்பான 5 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதுக்கை, ஹங்வெல்ல, பொல்கஸ்ஓவிட்ட, ஜா-எல மற்றும் ஹட்டன் ஆகிய இடங்களிலேயே இச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.