எரிபொருளுக்கான விலை சூத்திரம் தொடர்பில் நிதியமைச்சு தெரிவித்துள்ள விடயம்.

எரிபொருளுக்கான விலை சூத்திரத்தைக் கொண்டு வருவதற்கு இதுவரையில் எந்தவித கொள்கை ரீதியான தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல தெரிவித்துள்ளார்.

கனியவள கூட்டுத்தாபனத்திற்கு தற்போது ஒரு லீற்றர் பெற்றோலுக்கு 20 ரூபாவும், ஒரு லீற்றர் டீசலுக்கு 36 ரூபாவும், ஒரு லீற்றர் மண்ணெண்ணெய்க்கு 60 ரூபாவும் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அவ்வாறான சந்தர்ப்பங்களில் எரிபொருள் விலை சூத்திரத்தில் எரிபொருளுக்கான விலை அதிகரிக்கப்பட வேண்டும்.

எவ்வாறாயினும் அதனை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த ஆண்டு 130 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டதோடு, இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 210 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

அவற்றில் 65 பில்லியன் ரூபா கொரோனா தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்வதற்காக ஒதுக்கப்பட்டது.

அத்துடன் பைசர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்காக 94 மில்லியன் அமெரிக்க டொலர் பிரத்தியேகமாக வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்தத் தொகை உலக வங்கியிடமிருந்து கடனாக கிடைக்கப்பெற்ற தொகையில் ஒதுக்கப்பட்டதாக நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல தெரிவித்துள்ளார்.(HNT) 

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.