ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணி நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள விசேட அறிவிப்பு

நாட்டில் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கருத்தோட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் நியமிக்கப்பட்ட ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியினால் மக்கள் கருத்துகளை பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குழு மற்றும் தனி நபரொருவரினால் முன்வைக்க விரும்பும் நிலைப்பாடு மற்றும் யோசனைகளை ocol.consultations@gmail.com என் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க முடியும்.

அதேபோன்று தபால் மூலம் அனுப்பி வைக்க விரும்புபவர்கள் செயலாளர், ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி, தபால் இலக்கம் 504, கொழும்பு என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க முடியும்.

அவ்வாறான நிலைப்பாடுகள் மற்றும் யோசனைகள் எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்க வேண்டுமென ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி அறிக்கை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஒவ்வொரு தரப்பினரதும் நிலைப்பாடுகளையும் கவனத்தில் கொண்டே மக்கள் கருத்தைப் பெற தீர்மானித்துள்ளதாக அந்த செயலணி அறிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.