இம்மாதத்தில் 4ஆவது முறையாகவும் எரிவாயு கொள்கலன் வெடிப்பு சம்பவம் பதிவானது

கொட்டாவ பன்னிபிட்டிய பிரதேசத்தில் வீடொன்றில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இன்று (25) காலை இடம்பெற்ற குறித்த வெடிப்பு சம்பவம், எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இந்த வெடிப்பினால் குறித்த வீடு பலத்த சேதமடைந்துள்ளதுடன், வீட்டில் இருந்த எவருக்கும் காயம் ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த மாதத்தில் இது போன்ற சம்பவங்கள் பல பகுதிகளில் பதிவாகியுள்ளன.

இந்நிலையில், கடந்த 4 ஆம் திகதி வெலிகம, கப்பரதொட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் எரிவாயு கொள்கலனில் கசிவு ஏற்பட்டு வெடித்ததன் காரணமாக இருவர் காயமடைந்தனர்.

அத்துடன், கடந்த 16 ஆம் திகதி இரத்தினபுரி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றிலும், எரிவாயு கொள்கலன் வெடித்தது.

கடந்த 20 ஆம் திகதி கொழும்பில் உள்ள உணவகம் ஒன்றில் எரிவாயு கொள்கலன் வெடித்ததில் இருவர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.