16 வயது இளைஞன் செலுத்திய சொகுசு வாகன விபத்து தொடர்பில் நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு!

வெலிசர பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட 16 வயது சிறுவன் மற்றும் அவரது தந்தை ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை எதிர்வரும் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

வெலிசர பகுதியில் அதிசெகுசு கார் ஒன்று, முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார் ஆகியவற்றுடன் மோதுண்டு நேற்று விபத்துக்குள்ளாகியது.

16 வயது சிறுவன் செலுத்திய அதிசொகுசு கார், கட்டுப்பாட்டை இழந்தமையே இந்த விபத்துக்கான காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்திருந்ததுடன், மேலும் மூவர் காயமடைந்திருந்தனர்.

இந்த நிலையில், சிறுவர் ஒருவருக்கு வாகனத்தை செலுத்த அனுமதி வழங்கிய சிறுவனின் தந்தையும் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.