15 அத்தியாவசிய பொருட்களடங்கிய நிவாரண பொதி 1000 ரூபாய் - வர்த்தக அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு.

லங்கா சதொச விற்பனை நிறுவனத்திடமிருந்து 15 அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய ஒரு பொதியை, தற்போதைய சந்தை விலையை விட 1,000 ரூபாய் குறைவாக வாங்க முடியுமென வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். லங்கா சதொச விற்பனை நிறுவனத்தினூடாக வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து தெளிவூட்டும் ஊடக சந்திப்பொன்று கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

சதொச நிறுவனத்தின் நேரடி தொலைபேசி இலக்கமான 1998க்கு அழைப்பதன் மூலம், வாடிக்கையாளர்களுக்கு இந்த 15 பொருட்களையும் நிவாரண விலைக்கு கொள்வனவு செய்ய முடியும்.

அத்துடன், உலகின் பண்டங்களின் விலை நிர்ணயம் செய்யும் நாடுகளின் விநியோகச் சங்கிலி வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், ஒரு நாட்டிற்கு உள்ள ஒரே தீர்வு அந்நாட்டின் உற்பத்தியை வலுப்படுத்துவதே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.