நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா! PHI சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!

இலங்கையில் கீழ் மட்டத்தில் மீண்டும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அவதானிக்க முடிவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவிக்கின்றார்.

நோய் அறிகுறிகள் தென்படாத கொவிட் தொற்றாளர்கள் பெரும்பாலும் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இதனால், சாதாரண பொது மக்கள் மத்தியில் எழுமாறாக PCR அல்லது ரெபிட் அன்டீஜன் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

இந்த காலப் பகுதியில் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது செயற்படுவதை அவதானிக்க முடிவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

இவ்வாறான நிலைமை தொடருமானால், எதிர்காலத்தில் அபாயமான சூழ்நிலை ஏற்படும் என சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண எச்சரிக்கை விடுக்கின்றார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.