ஆசிரியர், அதிபர்களுக்கு ஆளுநர் ஒருவர் விடுத்துள்ள எச்சரிக்கை!

21 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமான பிறகு வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் நவம்பர் மாத சம்பளம் நிறுத்தப்படும் என்று வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொள்ளுரே தெரிவித்துள்ளார்.

அதேபோல், 25 ஆம் திகதியன்று யாராவது வந்தால், அவர்கள் பாடசாலைக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அவர் தெரிவித்தார்.

சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு கோரி, இணைய கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து விலகி ஆசிரியர் அதிபர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தத்தின் 100 வது நாள் நேற்று.

இந்தப் பின்னணியில், ஆசிரியர் அதிபர் சம்பள முரண்பாடுக்கு எதிரான தேசியக் கூட்டமைப்பு கல்விச் செயலாளர் பேராசிரியர் கபில பெரேராவை நேற்று (18) சந்தித்து கடிதம் ஒன்றை கையளித்து இருந்தனர்.

சம்பளப் பிரச்சினை தீரும் வரை தமது தொழிற்சங்கங்களின் ஆசிரியர் அதிபர்கள் கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகளுக்கு செல்லமாட்டார்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், எதிர்வரும் நேற்று 25 ஆம் திகதி முதல் கற்பித்தல் நடவடிக்கைகளைத் தொடங்க ஆசிரியர் அதிபர்கள் தொழிற்சங்க கூட்டணி முடிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.