பாலர் பாடசாலைகளை மீள ஆரம்பிக்க அறிவிப்பு வெளியானது.

முன்பள்ளிகளை ஆரம்பிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளிகள் மற்றும் ஆரம்பக்கல்வி, பாடசாலை அடிப்படை வசதிகள், கல்வி சேவை இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்தார்.

சிறுவர் செயலகத்தினூடாக இதற்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மாவட்ட COVID ஒழிப்பு குழுவின் அனுமதியுடன், பொது சுகாதார பரிசோதகரின் கண்காணிப்பின் கீழ் சுகாதார ஒழுங்கு விதிகளுக்கு அமைய முன்பள்ளிகளை ஆரம்பிக்க சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

முன்பள்ளிகளுக்கு தேவையான சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அதற்கமைய, 16,000-இற்கும் மேற்பட்ட முன்பள்ளிகளுக்கு உடல் வெப்பமானி, தொற்று நீக்கும் திரவம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்திக் கடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.