ஆசிரியர்கள் - அதிபர்கள் தொழிற்சங்கங்களின் அதிரடி அறிவிப்பு!

அதிபர் – ஆசிரியர் சங்கங்கள் இணைந்து எதிர்வரும் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சற்றுமுன் தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு மற்றும் நாட்டிலுள்ள மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாத்தல் உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதோடு, அரசாங்கத்திற்கு அச்சுறுத்தியோ, பலவந்தமாகவோ தங்களிடமிருந்து பாடசாலை திறப்புகளை வாங்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.

அத்தோடு, அனைத்து அதிபர் ஆசிரியர்களும் எதிர்வரும் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் பாடசாலைக்கு சமூகமளிக்க போவதில்லை எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.