முஸ்லிம்களுக்கு கடும் கட்டுப்பாடுகளுடன் சுகாதார அமைச்சு வழங்கிய அனுமதி.

இன்று(22) முதல் ஜும்ஆ தொழுகைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன் அடிப்படையில் அதிகபட்சமாக 50 நபர்களுக்கு மாத்திரம் ஒன்று கூட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிவாயல்களில் ஒரேயொரு குத்பா பிரசங்கமே நடாத்தப்படல் வேண்டும், மாறாக இரு ஜும்ஆ தொழுகைகளுக்கு அனுமதியில்லை.

வருகை தருபவர்கள் சுகாதார வழிமுறைகளை சரிவர பேணுவதோடு, முசல்லாஹ் (விரிப்பு) எடுத்து வருதல் அவசியம்.

ஒரு மீற்றர் சமூக இடைவெளி பேணுதல் கட்டாயம்.

முகக்கவசம் கட்டாயம் அணியப்படல் வேண்டும்.

பள்ளிவாயல்களில் சவர்க்காரமிட்டு கைகளை கழுவிக்கொள்ளும் வசதிகள் காணப்படல் வேண்டும்.

முடிந்தளவு வீடுகளில் இருந்தே வுழுச்செய்து கொண்டு வர வேண்டும், ஹவுல்களில் வுழுச்செய்தல் கூடாது. குழாய்களில் வுழுச் செய்தல் முடியும்.

கொரோனா அறிகுறிகளுடன் (இருமல்,சலி, காய்ச்சல், தொண்டை வலி போன்றவை) எவரும் பள்ளிவாயனுள் நுழையக்கூடாது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.