மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப தயாராகும் பெற்றோருக்கு சுகாதார பிாிவு விடுத்துள்ள அறிவுறுத்தல்

பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் மாணவர்களைப் பாடசாலைக்கு அனுப்பும்போது, சுகாதார பழக்கவழக்கங்களின் முக்கியத்துவம் குறித்து பெற்றோர்கள் விளக்கமளிக்க வேண்டும் எனச் சுகாதாரத்துறை கோரியுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், கலந்து கொண்டு கருத்து தெரிவித்த இலங்கை குடும்பநல வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் விசேட வைத்தியர் மல்காந்தி கல்ஹேன இதனைத் தெரிவித்துள்ளார்.

மாணவர்களை, இந்தத் தொற்றிலிருந்து பாதுகாக்கும் பொறுப்பு தாய், தந்தை ஆகிய இருவருக்கும் உள்ளது.

முகக்கவசம் அணிதல், கைக்கழுவுதல், சமூக இடைவெளியைப் பேணுதல் என்பனவற்றைக் கடைப்பிடிக்கவும், உணவைப் பகிர்ந்து உண்பதைத் தவிர்க்கவும் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று விசேட வைத்தியர் வலியுறுத்தியுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.