நாட்டிலுள்ள சகல பாடசாலைகளினதும் ஆரம்ப பிரிவு வகுப்புகள் மீள திறப்பதற்கான திகதி அறிவிப்பு.

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளின் ஆரம்ப பிரிவு வகுப்புகளை எதிர்வரும் 25ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் பெரேரா கபில பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.

கொவிட் பரவல் காரணமாக சுமார் 06 மாதங்கள் பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன.

ஏனைய வகுப்புகளை ஆரம்பிப்பது தொடர்பான திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும் அதேவேளை, கொவிட் பரவலுக்கு மத்தியில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு சகல தரப்பினரினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் முன்வைக்கப்பட்டிருந்த சுகாதார வழிகாட்டலுக்கமைய 4 கட்டங்களின் கீழ் பாடசாலைகளை திறக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, 200க்கும் குறைந்த மாணவர் தொகையை கொண்ட பாடசாலைகள் நேற்று (21) முதல் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.