சமையல் எரிவாயு விலை அதிகரிப்பை தொடர்ந்து சிற்றுண்டிச் சாலை உணவு பொருட்களின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச் சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாளை முதல் அமுலாகும் வகையில் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச் சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்
இதன்படி மதிய உணவு பொதி , கொத்து, பால் தேநீர் ஆகியனவற்றின் விலையினை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Post a Comment