மக்கள் அவதானம்! மத்திய மலைநாட்டில் கடும் மழை : வான் கதவுகள் திறப்பு

மலையகத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. 

அதற்கமைய மேல் கொத்மலை நீர்த்தேகத்தின் இரு வான்கதவுகளும், மஸ்கெலியா - மவுஸாகலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகளும், கெனியோன் நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவும், லக்ஷபான நீர்த்தேக்கத்தின் இரு வான்கதவுகளும் இன்று (11) காலைமுதல் திறக்கப்பட்டுள்ளன.

இதேவேளை காசல்ரீ நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதிகளில் இன்று காலை 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இதனால் காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

அத்துடன் நோர்டன்பிரிட்ஜ் பகுதியில் அமைந்துள்ள விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதிகளில் கடுமையான மழை பெய்து வருவதனால் அந்த நீர்த்தேக்கத்தின் ஆறு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன

எனவே மேற்படி நீர்த்தேக்கங்களை அண்டிய தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.