மூன்றாவது கொவிட் தடுப்பூசி செலுத்தப்படும் திகதி அறிவிப்பு

மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், இதுவரையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ள தேவையான வசதிகளும் அமைத்துக் கொடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவையேனும் இரண்டு கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டவர்களுக்கு செயல் ஊட்டியாக பைஸர் தடுப்பூசி செலுத்தப்படும்.

இதற்கமைய, முதற்கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டோர், சிறுநீரக கோளாறு, புற்று நோய் போன்ற பாரதூரமான நோய்களைக் கொண்டுள்ள 30 – 60 வயதுக்கு உட்பட்டோருக்கு மூன்றாவது தடுப்பூசி செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் ஆகியோருக்கும் இவ்வாறு பைஸர் தடுப்பூசி செயலூட்டியாக செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.