நாளை மேலும் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும் சாத்தியம்.

எரிவாயு, சீமெந்து மற்றும் கோதுமை மா என்பவற்றின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் தற்போது அதுசார்ந்த நிறுவனங்களுக்கு இடையிலான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

குறித்த அத்தியாவசிய பொருட்களின் விலைகள் நாளைய தினம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து மூடையின் விலை 200 ரூபாவினால் அதிகரிக்க வேண்டுமென சீமெந்து விநியோகஸ்தர்கள், விடயத்திற்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ணவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது யோசனை முன்வைத்திருந்தனர்.

எவ்வாறாயினும் குறித்த விலையை 100 ரூபாவினால் மாத்திரம் அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண கோரியுள்ளார்.

இதற்கமைய 50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து மூடையின் விலையை 97 ரூபாவினால் அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 10 முதல் 12 ரூபா வரையில் அதிகரிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன

இதேவேளை, எரிவாயுவிற்கான உரிய விலை இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை.

எரிவாயு நிறுவனங்கள் இதுதொடர்பான கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளன.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.