அதிபர், ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு!

நாட்டில் 200 மாணவர்களுக்கு உட்பட்ட பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் கல்வியமைச்சு முக்கிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.

பாடசாலைகளுக்கு செல்லும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு அமுலிலுள்ள மாகாண போக்குவரத்து கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் பாடசாலைகளுக்கு சமூகமளிக்க முடியும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மாகாணங்களுக்கு இடையே பயணிப்பதற்காக ஆசிரியர்கள் அவர்கள் பணியாற்றும் பாடசாலை அதிபரின் குறுந்தகவல் ஒன்றை மாத்திரம் பெற்றுக் கொள்வது போதுமானது என்றும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கு பாதுகாப்புப் பிரிவினரினால் எந்தத் தடையும் ஏற்படமாட்டாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நாடளாவிய ரீதியாக 25 வீத ஆசிரியர்களும் 16 வீத மாணவர்களும் இன்று பாடசாலைகளுக்கு சமூகமளித்திருந்ததாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.