இராகலை பிரதேசத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் பலியாகினர்.
நேற்றிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
தந்தை, தாய், அவர்களின் மகள் மற்றும் மகளின் ஒரு வயது குழந்தை உட்பட இரண்டு பிள்ளைகள் ஆகியோரே தீ விபத்தில் உயிரிழந்தனர்.
இராகலை காவல்துறையினர் குறித்த வீட்டை பரிசோதனைக்கு உட்படுத்தியதுடன், சம்பவம் தொடர்பில், வலப்பனை நீதிவான் நீதிமன்றில் அறிக்கையிட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளனர்.
அத்துடன், தீப்பரவலுக்கான காரணத்தைக் கண்டறிய காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Post a Comment