எரிபொருள் விலை அதிகரிக்கப்படுமா? ஜனாதிபதி வழங்கிய அதிரடி உத்தரவு.

எரிபொருள் விலை குறித்து அமைச்சரவை கூட்டத்தில் நேற்று கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று பிற்பகல் அமைச்சரவை கூட்டம் இடம்பெற்றிருந்தது.

விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் உதய கம்மன்பில இதன்போது எரிபொருளின் விலை தொடர்பில் அமைச்சரவைக்கு விளக்கியுள்ளார்.

எவ்வாறாயினும் சந்தையில் எரிவாயு, பால்மா மற்றும் கோதுமைமா உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள பின்னணியில் எரிபொருள் விலையை அதிகரிப்பதனால் நுகர்வோர் பொருளாதார ரீதியாக பாதிப்படைவர் என இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி, தற்போது எரிபொருளின் விலையை அதிகரிப்பது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மக்கள் மீது பாரத்தை சுமத்தாமல் அரசாங்கம் அதைப் பொறுப்பேற்று செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உர நெருக்கடி தொடர்பிலும் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் கொவிட்-19 காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.