நாடு முழுவதும் மீண்டும் மின்தடை ஏற்படும் ஆபத்து?

தேசிய சொத்துக்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் அரசாங்கத்தின் செயற்பாட்டினை எதிர்த்து வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த திட்டமிட்டு வருவதாக மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கங்களின் இணைப்பாளரான ரஞ்ஜன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது குறித்து பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கபட்டுள்ளதாவும் அவர் மேலம் தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

இதேவேளை நேற்றைய தினத்தில் தென்மாகாணம் மற்றும் மேல்மாகாணத்தில் ஓரிரு இடங்களில் மின்தடை ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் மின்சார சபை ஊழியர்கள் ஈடுபட்டால் மீண்டும் நாடு மின்தடையை எதிர்கொள்ள நேரிடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.