ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ ஆகியோர் ஒன்றிணைந்து நம்பிக்கைக்குரிய தீர்வை முன்வைத்துள்ளதாகக் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாளை பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் விளக்கமளித்து அவர் இன்று (20) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளாா். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மாணவர்களின் எதிர்காலம் பெற்றோரின் மகிழ்ச்சி மாத்திரமல்ல, நாட்டு மக்கள் அனைவரும் சந்தோசாத்திலுள்ளனா். அந்த மகிழ்ச்சியுடன் இலட்சக்கணக்கான மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் நாளையிலிருந்து மீண்டும் ஆரம்பமாகின்றன.

நீண்ட நாட்களாக சந்திக்காமலிருந்த தமது பிள்ளைகளின் மகிழ்ச்சியான முகத்தை பார்ப்பதாகற்காக நாளை அதிபா்கள் ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு வருகை தருவார்களாக இருக்கும்.

கல்வி என்பது தேசத்தில் எதிர்காலம். நாட்டின் முன்னேற்றத்தின் பலமும் கல்வியாகும். அந்த கல்வியைப் பெற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ ஆகியோா் ஒன்றிணைந்து நம்பிக்கைக்குரிய தீர்வை முன்வைத்துள்ளனா்.

அதேபோன்று பருத்திதுறையிலிருந்து தேவேந்திரனை வரையில் மேற்கிலிருந்து கிழக்கு வரை இருக்கம் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலைக்கு வருவதை எவராலும் தடுக்க முடியாது.

மாணவர்களுக்கான சுதந்திரக் கல்விக்காக இருக்கும் உரிமையைப் பயன்படுத்திக் கொள்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துஇ சுதந்திரக் கல்விக்கான உரிமையைப் பாதுகாத்துக்கொள்வதற்காக சகலரும் கைகோர்த்துக்கொள்ள வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.