பயங்கரவாத தடை சட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து துரிதமாக நடவடிக்கை எடுக்குமாறு, தான் உரிய தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போதே, ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, பயங்கரவாத தடை சட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து துரிதமாக நடவடிக்கை எடுக்குமாறு, தான் சட்டமா அதிபருக்கும் நீதியமைச்சருக்கும் பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அத்துடன், சர்வதேச ரீதியில் மனித உரிமைகள் தொடர்பில் தற்போது காணப்படுகின்ற இணக்கப்பாடுளுக்கு அமைவாக, தாமும் செயற்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் பயங்கரவாத தடை சட்டம் தொடர்பில், இதன்போது விரிவாக கலந்துரையாடியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது
இதன்படி, இலங்கை அரசாங்கம் காலத்தை அடிப்படையாகக் கொண்ட தீர்வுகளை எட்ட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் இதன்போது வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஜனநாயக ரீதியில் தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment