பாடசாலைகளின் ஏனைய வகுப்புக்களை ஆரம்பிப்பது குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு.

நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளின் தரம் 10, 11, 12 மற்றும் 13ம் வகுப்புக்களை எதிர்வரும் 8ம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் பரிந்துரைகள் கிடைக்கப் பெற்றவுடன், 6ம் தரம் முதல் 9ம் தரம் வரையான வகுப்புக்களை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்துடன், தற்போது காணப்படுகின்ற கால எல்லையை முகாமைத்துவப்படுத்தி, பாட விதானங்களை கற்பிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

மேலும், பரீட்சைகளை நடத்தும் விதம் குறித்து, பரீட்சை திணைக்களத்துடன் கலந்துரையாடல்களை நடத்தி வருவதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவிக்கின்றார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.