சர்ச்சை குறித்து பன்டோரா ஆவணம் தொடர்பில் ரஞ்சன் வெளியிட்ட பரபரப்பு தகவல்

பன்டோரா ஆவண சர்ச்சை குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ரஞ்ஜன் ராமநாயக்க இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் தலைவருக்கு விசேட கடிதமொன்றை தனது சட்டத்தரணி ஊடாக நேற்று(14) அனுப்பியுள்ளார். 

மறைக்கப்பட்ட சொத்துக்கள் குறித்து பன்டோரா ஆவணத்தின் ஊடாக அம்பலமாகியவர்களின் பட்டியலில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷ மற்றும் தொழிலதிபர் திருக்குமார் நடேசன் ஆகியோர் சம்பந்தப்பட்ட விடயங்களும், ஆவணங்களும் தன்னிடம் இருப்பதாக ரஞ்ஜன் ராமநாயக்க தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது தொடர்பாக ஆணைக்குழுவிடம் வாக்குமூலம் வழங்க அவகாசம் தருமாறும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.