தந்தையும் இரு பிள்ளைகளும் நீாில் மூழ்கி பலி!

வெல்லவாய – எல்லவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காத்தான்குடியைச் சேர்ந்த தந்தையும், அவரது பிள்ளைகள் இருவருமே இவ்வாறு பலியாகியுள்ளனர்.

அத்துடன் இவர்கள் மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் இருந்து சுற்றுலா பயணம் சென்றவர்கள் என தெரியவந்துள்ளது.

இன்று (20) பிற்பகல் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் 38 வயதான தந்தையும், 15 வயதான மகன் மற்றும் 11 வயதான மகள் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை தொடர்கின்ற அதேவேளையில் பொறுமையிழந்த நிலையில் பொதுமக்கள் சுற்றுப் பயணங்கள் மேற்கொண்டு வருவதையும் இதன் பின்னனியில் விபத்துக்கள் நடப்பதையும் அவதானிக்க கூடியதாக உள்ளது. எனவே பொதுமக்கள் அவதானமாக நடந்து கொள்வதன் மூலம் விரும்பத்தகாத விடயங்களிலிருந்து நம்மையும், நாட்டையும் பாதுகாத்து கொள்ள முடியும்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.